ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க தாக்குதல்

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது பொலிசார் கண்ணீர்புகை மற்றும் தண்ணீர் பீச்சு தாக்குதலை நடத்தினார்கள்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத் நடத்தப்பட்டது.

போராட்ட பேரணி மருதானை தொழிற்நுட்ப சந்திக்கு அருகில் சென்ற போது பொலிசாரால் வழிமறிக்கப்பட்டது.

இதேவேளை மழை காரணமாக போராட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போராட்டத்துக்கு பேருந்துகளில் வந்தவர்கள் பேருந்திலிருந்து இறங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: