விடுதலைப் புலிகளின் தடையை நீக்க இந்தியாவிடம் விண்ணப்பம்

சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளை அமைப்பை நீக்க கோரி இந்தியாவில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் பிரதமர் ருத்ரகுமாரன், இந்திய உள்துறை அமைச்சுக்கு இந்த மனுவை அனுப்பியுள்ளார்.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான சில விடயங்கள்:-
- 2019ஆம் ஆண்டு முதல் இந்த கோரிக்கையை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்து வருகிறது.
- இந்த தடைக் காரணமாக, ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பணியாற்றுவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.
- தமிழீழ விடுதலைப்புலிகள் தற்போது அமைப்பாக இயங்கவில்லை என நிபுணர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
- விடுதலைப்புலிகள், பிராந்தியத்திற்கும் இந்தியாவுக்கும் அச்சுறுத்தல் என இந்தியா, கருதுவதை ஏற்க முடியாது.
- தமிழ்மக்களின் அபிலாசைகளை முன்னெடுக்க இந்தியாவின் இராஜந்திர உதவி அவசியம்.
- இந்திய மக்களின் ஒருமைப்பாட்டையும், பிராந்திய பாதுகாப்பையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கை உறுதிப்படுத்தும்.
- தமிழீழமும் இந்தியாவுடன் நல்லுறவைக் கொண்டிருக்கும்.
Please follow and like us: