வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் மீண்டும் சிக்கல்

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணம் இன்னும் அரச அச்சகத்துக்கு வழங்கப்படவில்லை.

இதனால் அஞ்சல் மூல வாக்குச் சீட்டுகளை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே அய்வரி செய்திகளிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்கான கொடுப்பனவு இன்னும் கிடைக்கப்பெறாததால், அந்தப் பணிகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தப் பணிகளுக்காக 152 மில்லியன் ரூபாவும், ஊழியர்களின் கொடுப்பனவுக்காக 52 மில்லியன் ரூபாவும் தேவைப்படுவதாகவும், ஆனால் 40 மில்லியன் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

Please follow and like us: