வட்ஸப் அறிமுகப்படுத்தும் முக்கியமான அப்டேட்

தகவல் பரிமாற்று ஊடகமான வட்ஸப்பில் உள்ள குழுக்களை கட்டுப்படுத்தகூடிய புதிய நடைமுறை ஒன்றை வட்ஸப் நிறுவனம் கொண்டுவருகிறது.
தற்போது வட்ஸப் குழுவில் இணைவதற்கான அழைப்பு விடுக்கப்படும் போது, அந்த இணைப்பு (invite link) உள்ள எவரும் குழுவில் சேர்ந்துகொள்ள முடியும்.
எனவே இது புதிய உறுப்பினர்கள் மீது குழுவின் நிர்வாகிகளுக்கு (admin) எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலை இருப்பதோடு, அவர்கள் குழுவில் சேர்ந்த பிறகு மட்டுமே ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
ஆனால் புதிய அப்டேட் மூலம், புதிய பங்கேற்பாளர்களை அங்கீகரிக்க குழு நிர்வாகிகளுக்கு தெரிவு வழங்கப்படவுள்ளது.
எனவே முன் அனுமதியின்றி யாரும் குழுவில் சேர முடியாது என்பதோடு, பயனர்களுக்கு “குழுவில் சேர் (Join the Group ” என்பதற்கு பதிலாக “சேர்வதற்கான கோரிக்கை விடு (Request to Join) என்ற செய்தி காட்டப்படும்.