இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து

கிரீஸ் நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந் நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 85 பேர் காயமடைந்துள்ளதாக கிரீஸ் தீயணைப்பு படை கூறியுள்ளது.

ஏதென்ஸில் இருந்து வடக்கு நகரமான தெசலோனிகிக்கு பயணித்த பயணிகள் ரயிலொன்று மத்திய கிரீஸில் உள்ள லாரிசா நகருக்கு வெளியே பயணித்த சரக்கு ரயிலுடன் அதிவேகமாக மோதியமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தினையடுத்து ரயிலின் பெட்டிகள் சில தீக்கிரையாகியுள்ள நிலையில் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Please follow and like us: