இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு  

இலங்கை இன்று எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு, வளமான இந்திய – பசுபிக் பிராந்தியத்தை கட்டியெழுப்புவது முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “இந்திய – பசிபிக் பிராந்தியத்திற்கான பொதுவான பார்வை தெற்காசியாவிற்கான தாக்கங்கள்” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தலைமையில் நடைபெற்றது.

Please follow and like us: