மீண்டும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் சாத்தியம்  

வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்போது, வாகன இறக்குமதி தொடர்பான தீர்மானங்களை தம்மால் மேற்கொள்ள முடியாது எனவும் அதனை நிதியமைச்சே இறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்காலத்தில் நிதி அமைச்சுடனும்  கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us: