இந்திய நாணயத்தை இலங்கையில் பாவிக்க ஆலோசனை  

இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வியோன் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்திய நாணயத்தை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய நாணயமாக மாற்றுவது அவசியம்.

இதன் ஊடாக இந்தியர்கள் இலங்கையுடன் நேரடியாக அவர்களின் நாணயத்தில் பரிவர்த்தனை செய்ய முடியும்.

அத்துடன் இலங்கை வேறு நாணயத்தை சார்ந்து இல்லாமல் இந்தியாவுடன் கொடுக்கல் வாங்கல் செய்யலாம் என்றும் அவர்  கூறினார்.

Please follow and like us: