மக்கள் பணத்தை கொள்ளையடித்த சகலருக்கும் எதிராக சட்டம்

மக்கள் பணத்தை கொள்ளையடித்த சகலருக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் அனைத்தும் மீளப் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று மக்கள் வாழ்வில் அரசாங்கம் சுமையை ஏற்படுத்துவதாகவும், சகிக்க முடியாத வாழ்க்கையை எதிர்கொண்டு மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நாட்டை சிறந்த இடத்திற்கு உயர்த்துவதே ஐக்கிய மக்கள் சக்தியின் கனவாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்கான பயணத்தை இந்த தேர்தலுக்கு பிறகு ஆரம்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மிஹிந்தலை தேர்தல் தொகுதிக்கான பிரசார கூட்டம் நாச்சியாதீவு பிரதேசத்தில் இடம் பெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Please follow and like us: