மாசி 5, 2023

வாழைச்சேனையில் விபத்து

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (24) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் சிலாபம் பகுதியிலிருந்து காத்தான்குடி நோக்கி சென்ற வேனும் கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கி பயணித்த பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதியதிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இவ் விபத்தில் வேன் சாரதி உயிரிழந்துள்ளதுடன், வேனில் பயணித்த ஆறுபேர் காயங்களுக்குள்ளாகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Please follow and like us: