தாவடியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, மோட்டார் சைக்கிள் – ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி 3 மோட்டார் சைக்கிள்கள் மிகை வேகத்தில் பயணித்ததாகவும் அதில் 2வதாக வந்த மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாணத்திலிருத்து மருனார்மடம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த அனுஜன் (வயது 19) என்ற இளைஞன் உயிரிழந்த நிலையில், ஜெயசீலன் ரகுசான் (வயது 17) என்ற இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த இளைஞனுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Please follow and like us: