றமழான் காலத்தில் விசேட விடுமுறை  

இம்முறை றமழான் காலத்தில் முஸ்லிம் உத்தியோகஸ்தர்களுக்குத் தொழுகையிலும், மத வழிபாடுகளிலும் கலந்து கொள்ளக்கூடிய விசேட ஒழுங்குகளைச் செய்யுமாறு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் இக் காலத்தின்போது அவ் உத்தியோகஸ்தர்கள் சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடியதாக வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும்.

தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் அவர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்று நிருபம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

Please follow and like us: