யாத்திரை செல்பவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட வேண்டுகோள்  

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாத்திரையில் ஈடுபட்டிருந்த நான்கு யாத்திரிகர்கள் உணவு விஷம் காரணமாக உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எமது விசாரணையின் போது, மேலும் 10 பேர் உணவு விஷமானமை மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக​ சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஸ்ரீ பாத யாத்திரை மற்றும் பிற யாத்திரைகளில் ஈடுபடும் அனைத்து பக்தர்களும் ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், பொதுமக்கள் குடிநீரை முடிந்தவரை காய்ச்சி குடிநீரை தங்கள் வீடுகளில் இருந்து எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

Please follow and like us: