தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மார்ச் மாதம் 9ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்குத் தரப்பட வேண்டிய நிதியை மேலும் தாமதிக்க வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டுக்கான பாதீட்டில் ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபாவில் தேர்தல்களுக்கான ஆரம்ப மற்றும் அத்தியாவசிய செலவினங்களுக்காக 770 மில்லியன் ரூபாவை கோரியுள்ள போதும், அதில் வெறும் 100 மில்லியன் மாத்திரமே திறை சேரியினால் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதனால் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு நெருக்கடியில் இருப்பதாகவும், தொடர்ந்தும் நிதி வழங்கப்படுவது தாமதிக்கப்பட்டால் உச்ச நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.