கொக்குளாய் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த அரியவகை விலங்கு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் அரியவகை காட்டு விலங்கினமான அழுங்கு எனப்படும் விலங்கினம் புகுந்துள்ளது.

வீட்டின் உரிமையாளர்கள் அவசர தொலைபேசி அழைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளதை தொடர்ந்து குறித்த வீட்டிற்கு சென்ற கொக்குளாய் பொலிஸார் குறித்த விலங்கினத்தினை பத்திராமக மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த அழுங்கினை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Please follow and like us: