சிறுநீரக மோசடியில் துபாய் செல்ல முயன்றவர் விமான நிலையத்தில் கைது!

பொரளை தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக வறிய மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்றிரவு (9) துபாய் செல்வதற்காக  விமான நிலையத்துக்கு சென்றிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் வைத்தியசாலையில் பணிபுரிபவர் போன்று வேடமணிந்து இந்த இந்தமோசடியில்ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

Please follow and like us: