ஒன்றரை கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது

கந்தானை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது  ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 31 வயதுடைய ஆண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்..

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு படகம பகுதியில்

பொலிஸ் விசேட அதிரடி படையின் கோனஹேன முகாமிலுள்ள உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய கடந்த 16 ஆம் திகதியன்று சோதனையொன்‍றை முன்னெடுக்கப்பட்டது.

இந்த சோதனையின்போது சந்தேக நபரிடமிருந்து ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின், போதைப்பொருள் வர்த்தகத்தில் மூலமாக பெறப்பட்டாக சந்தேகிக்கப்படும் 23,900 ரூபா பணம், டிஜிட்டல் தராசுகள் -2,  கையடக்க தொலைபேசிகள் -2, ‍‍ஹெரோயின் போதைப்பொருளை பொதியிடக்கூடிய காட்போட் பெட்டிகள் -3, குளு கன் -1,  அலுமினிய கவர்கள் -2,  சீல் செய்யப்படும் கருவி -1, காசு எண்ணுவதற்கு பயன்படுத்தப்படும் இலத்திரனியல் கருவி -1, வரவு செலவு குறிப்பேடு புத்தகங்கள் -1 ஆகியன  கைப்பற்றப்பட்டுள்ளன.

Please follow and like us: