கொழும்பு பூராகவும் முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறக்கோட்டையில் குறித்த அதிகாரிகளால் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 5 கிராம் 560 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய இராஜகிரிய நாவல வீதியைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, தலங்கம, கடுவெல, கிராண்ட்பாஸ், கோட்டை மற்றும் கிரிபத்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 5 திருடப்பட்ட முச்சக்கர வண்டிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகநபர் இன்று (23) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.