பாரிய பண மோசடியில் ஈடுபட்ட நபர்

இலங்கை வந்த சுற்றுலா பயணியிடம் பாரிய பண மோசடியில் ஈடுபட்ட நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

உனவடுன வோட்டர் கேட் ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரிடமிருந்து பணம் கொள்ளையிடப்பட்டிருந்தது.

சந்தேக நபர் நாகியாதெனிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான சந்தன சமன் குமார என்பவரே திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த ரஷ்ய பெண்ணிடமிருந்து 16,100 அமெரிக்க டொலர்கள், 195,000 ரஷ்ய ரூபிள் மற்றும் 200 யூரோக்கள் திருடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

குறித்த நபர் தொடர்பான தகவல் தெரிந்தால் உனவட்டுன பொலிஸ் சுற்றுலா பிரிவு நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Please follow and like us: