உயர்தர பரீட்சை பெறுபேறு நீண்டகாலம் தாமதிக்கும் நிலை

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீட்டு பணிகள் சில நாட்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு போதிய ஆசிரியர்கள் விண்ணப்பிக்காத காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இன்று (22) ஆரம்பமாகவிருந்தது.
ஆயினும் ஆசிரியர்களின் போதாமை காரணமாக அந்த நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.
விரைவாக விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க நவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Please follow and like us: