தும்பறை சிறைச்சாலையில் கைதியிடம் மீட்கப்பட்ட இரத்தினக்கல்!

தும்பறை  சிறைச்சாலையில் கைதி ஒருவரிடமிருந்து இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இது கைப்பற்றப்பட்டது.

தேடுதல் நடவடிக்கையின்போது, குறித்த கைதி  தனது இடுப்பில் இரத்தினக்கல்  ஒன்றை மறைத்து வைத்திருந்தார்.  இவர் சில தினங்களுக்கு முன்னரே  விளக்கமறியலில்  வைக்கப்பட்ட கைதி என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த மாணிக்கக்கல்  சந்தேக நபர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டதுடன்  இது தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டு உரிய மதிப்பீட்டின் பின்னர் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

Please follow and like us: