தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு  

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், நேற்று முதல் அதன் விலை அதிகரித்து வருகிறது.

உலக சந்தையில் திடீரென தங்கத்தின் விலை அதிகரித்ததன் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று கொழும்பு செட்டியார்த் தெருவில் ஒரு பவுண் 24 கரட் தங்கம் 165,000 ரூபாவாக நிலவியது.

அத்துடன் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 152,250 ரூபாவாக அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சந்தியில் தங்கத்தின் விலை குறைவடைந்து, டொலர் விலை மேலும் குறைவடையுமாக இருந்தால், இலங்கையிலும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

Please follow and like us: