மத்திய வங்கியின் வெளிநாட்டு ஒதுக்கம் மேலும் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

இது, 2023 ஜனவரியில் 2,121 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவிருந்து பெப்ரவரியில் 2,217 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

இது 4.5% அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதில் சீன மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் இடமாற்று வசதியும் அடங்கும் என்பதோடு, இது பயன்பாட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: