அதிவேக நெடுஞ்சாலையில் லொறியுடன் மோதி கார் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவ பிரதேசத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளானது.

ரஷ்யாவைச் சேர்ந்த பெண்ணொருவரை காலியில் இருந்து விமான நிலையத்தில் விடுவதற்காக அழைத்துச் சென்ற கார் ஒன்று, பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரை செலுத்திச் சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த ரஷ்யப்பெண் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Please follow and like us: