ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் | மீட்பு பணிகள் தீவிரம்

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 8 வயது சிறுவன் ஒருவர் விழுந்துள்ளார்.

அவர் 43 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டதாகவும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ANI செய்தி வெளியிட்டுள்ளது.

சமீர் யாதவ் என்ற சிறுவன் சிக்கியிருக்கும் ஆழ்துளைக் கிணற்றில் ஒக்சிஜன்  வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் மீட்பாளர்களால் சிறுவனிடம் இன்னும் பேச முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Please follow and like us: