மண்ணெண்ணெய் அருந்திய ஆண் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழப்பு

இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் அருந்தி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் நிட்டம்புவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழந்தை வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொள்கலனில் இருந்த மண்ணெண்ணெய்யைக் குடித்தது என்று குழந்தையின் பெற்றோர் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

மண்ணெண்ணெய் குடித்த குழந்தை வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட போதும் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Please follow and like us: