அண்ணனை கொலை செய்த குற்றச்சாட்டில் 14 வயதான தம்பி கைது

26 வயதான மூத்த சகோதரனை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் 14 வயதான சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்தறை – தேக்கவத்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாய் தந்தையர் வீட்டில் இல்லாத சமயத்தில், சகோதரர்கள் இருவருக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது கடுவா கத்தி ஒன்றினால் 14 வயதான இளைய சகோதரர், 26 வயதான மூத்த சகோதரரை தாக்கியுள்ளார்.
இதனை அடுத்து மூத்த சகோதாரர் மரணித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Please follow and like us: