இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் பலி  

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஆறு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலில் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் இருவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீன் சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு வீட்டை இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிட்டு ரொக்கெட்டால் தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.

இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல்களில் இந்த ஆண்டு குறைந்தது 68 பாலஸ்தீனியர்களை உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please follow and like us: