Sunday, February 25, 2024
spot_img
Homeசினிமா47 வயதில் 37 வயது நடிகையை கரம்பிடித்த பிரபல நடிகர்! வைரலாகும் புகைப்படங்கள்..

47 வயதில் 37 வயது நடிகையை கரம்பிடித்த பிரபல நடிகர்! வைரலாகும் புகைப்படங்கள்..

இந்தியாவில் பிரபலமான இந்தி நடிகரான ரன்தீப் ஹூடா தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார்.

2001இல் வெளியான மான்சூன் படத்தில் அறிமுகமானவர் ரன்தீப் ஹூடா.

47 வயதான நடிகர் ரன்தீப் ஹூடா ஹரியானாவை சேர்ந்தவர் ஆவார்.

இந்தியில் 30க்கும் மேற்பட்ட படங்கள் நடித்த இவரும், மணிப்பூரைச் நடிகை மற்றும்  தொழிலதிபர் லின் லைஷ்ரம் என்ற நடிகையும் காதலித்து வந்தனர்.

37 வயதான லைஷ்ரம் மொடலாக இருந்து நடிகையானவர். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இத்திருமணம் மணிப்பூரின் மெய்தே பாரம்பரிய முறைப்படி நடந்து முடிந்துள்ளது.

மணப்பெண் லைஷ்ரம் தங்க ஆபரணங்களில் ஜொலிக்கும் படி நடந்த இந்த திருமணத்தில்,  இருவரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ரன்தீப் , “இன்றுமுதல் நாங்கள் இருவரும் ஒருவராகி இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இருவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments