இலங்கைக்கு கிடைக்கும் 400 மில்லியன் டொலர்

இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி வசதியாக வழங்கப்படும் என உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3 தனியார் வங்கிகளுக்கு இந்த நிதி வசதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us: