கடன் உத்தரவாதம் வழங்க 4 நாடுகள் இணக்கம்

சர்வதேச நாணய நிதியத்துக்கு கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை வழங்க மேலும் நான்கு நாடுகள் முன்வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் குவைத் ஆகிய நாடுகள் சர்வதேச நாணய நிதியத்துக்கு கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை வழங்கியுள்ளன என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Please follow and like us: