இலங்கையில் மீண்டும் 3.2 மெக்னிடீயுட் நில அதிர்வு

இலங்கையில் சில இடங்களில் மீண்டும் சிறிய அளவான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.

மொனராகலை மாவட்டத்தின் புத்தல பகுதியில் இன்று காலை 3.2 மெக்னிடீட் அளவில் நில அதிர்வு ஒன்று பதிவாகி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் இதனால் பாதிப்புகள் எவையும் ஏற்பட்டிருக்கவில்லை.

கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் இதே இடத்தில் அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: