பண்டாரவளை லொறி விபத்தில் சிக்கி 21 தொழிலாளர்கள் காயம்!  

பண்டாரவளை கிரிஓருவ வீதியின் ஐசெலாப் பகுதியில் லொறி ஒன்று  இன்று (22) மாலை விபத்துக்குள்ளானதில் தோட்டத் தொழிலாளர்கள் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த 19 பெண்களும் மூன்று ஆண்களும் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்  படுகாயமடைந்த 7 பெண்கள் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரவளை சென்ஜென் தோட்டத்தில் பணி முடிந்து தொழிலாளர்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Please follow and like us: