Tuesday, September 26, 2023
HomeSrilankaநிறைவேற்று அதிகாரத்தாலேயே யுத்தத்துக்கு முடிவு கட்டப்பட்டதாம்! - ஜே.ஆரின் மூத்த பேரன் சொல்கின்றார்.

நிறைவேற்று அதிகாரத்தாலேயே யுத்தத்துக்கு முடிவு கட்டப்பட்டதாம்! – ஜே.ஆரின் மூத்த பேரன் சொல்கின்றார்.

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே வடக்கில் யுத்தத்தை முடிவுக்குக்  கொண்டு வர முடிந்தது.”

இவ்வாறு மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் மூத்த பேரனும் ஜே.ஆர். ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினருமான பிரதீப் ஜயவர்தன தெரிவித்தார்.

ஜே.ஆர் ஜயவர்தனவின் 117 ஆவது ஜனன தின நிகழ்வு கொழும்பில் நேற்று (17) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதீப் ஜயவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று நாட்டில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் துணிச்சலான தீர்மானங்களை நாம் பாராட்டுகின்றோம்.

நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்துக்கு நாம் பூரண ஆதரவளிக்கின்றோம். எனவே, நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments