Sunday, February 9, 2025
HomeSrilankaவவுனியா மாணவர்களின் மரணம் : அறிக்கை கோருகிறார் வடக்கு ஆளுநர் சார்ள்ஸ்!

வவுனியா மாணவர்களின் மரணம் : அறிக்கை கோருகிறார் வடக்கு ஆளுநர் சார்ள்ஸ்!

பாடசாலைகளுக்கான வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பற்ற விவசாயக்கிணற்றில் விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் உடனடியாக முறையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.திருமதி சார்ள்ஸ் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நேற்று (17) இடம்பெற்ற வலய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்ட 14, 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பாதுகாப்பற்ற விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தமைக்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.திருமதி சார்ள்ஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

வவுனியா முஸ்லிம் பாடசாலையில் கல்வி கற்கும் இவ்விரு மாணவர்களும் விளையாட்டுப்போட்டியின் போது பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்திற்கு அருகிலிருந்த விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சடலங்களின் பிரேதப் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதுடன், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments