மன்னார் மறைமாவட்டத்தில் புனித ஸ்தலமாக விளங்கும் மருதமடு அன்னையின் ஆவணி மாதம் 15 ஆம் திகதி நடைபெற இருக்கும் பெருவிழாவை முன்னிட்டு 06.08.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மடு அன்னை ஆலயத்தில் கொடியேற்றம் இடம்பெற்றது
பாப்பரசர் கொடியை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளாரும் அன்னையின் ஆலயக் கொடிகளை. மடு பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் மற்றும் சகோதர மொழி பேசும் அடிகளார் ஒருவரும் ஏற்றி வைத்தனர்
இதைத் தொடர்ந்து ஒன்பது தினங்கள் பிற்பகல் நவநாட்கள் இடம்பெறுகின்றன.