Tuesday, January 21, 2025
HomeCinemaநகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் மகள் காலமானார்.

நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் மகள் காலமானார்.

உலகின் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் இவரது மனைவியும் நடிகையுமான ஊனா ஓ நீலுக்கு பிறந்த 8 குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்தவர் ஜோசபின் சாப்ளின். இவர் 1949-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி கலிபோர்னியா மாகாணம் சான்டாமோஸிகா நகரில் பிறந்தார்.

பிரபல நடிகையாக வலம் வந்த ஜோசபின் 1952-ஆம் ஆண்டு சாப்ளின் இயக்கி, தயாரித்து நடித்த ‘லைம்லைட்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சார்லி, ஆர்தர் மற்றும் ஜூலியன் ரோனட் என 3 மகன்கள் உள்ளனர்.

74 வயதான ஜோசபின், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வசித்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக இவர் காலமானார். இவரது மறைவை அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஜோசபின் இறுதி சடங்கில் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments