இன்று (12.07.2023) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடம்பெறவுள்ளது.
தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா, சிரேஸ்ட பேராசிரியர் முகாமைத்துவ வணிக பீட முன்னாள் பீடாதிபதி தி.வேல்நம்பி, கிழக்கு பல்கலைக்கழக விலங்கியல் பேராசிரியர் வினோபா, பட்டப்படிப்புகள் பீட பேராசிரியர் S. கண்ணதாசன் ஆகியோரில் வாக்குகள் அதிகம் பெற்ற மூவர் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். அதில் ஒருவரினை ஜனாதிபதி துணைவேந்தராக தெரிவு செய்வார்.