Sunday, February 9, 2025
HomeWorldநேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் பலி.

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் பலி.

உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் லாம்ஜுரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.

இன்று காலை 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 6 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் காணாமல் போனதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட நிலையில், பகன்ஜே கிராமத்தின் லம்ஜுராவில் உள்ள சிஹந்தண்டா என்ற இடத்தில் ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களும் 6 பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஹெலிகாப்டர் மலை மேல் உள்ள மரத்தில் மோதியதே விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments