Wednesday, January 15, 2025
HomeSrilankaதரையில் கிடந்த தாய்! கட்டிப்பிடித்தவாறு உயிரிழந்த பச்சிளம் குழந்தை…

தரையில் கிடந்த தாய்! கட்டிப்பிடித்தவாறு உயிரிழந்த பச்சிளம் குழந்தை…

பொகவந்தலாவை – பிரிட்வெல்வத்த பகுதியில் தாய் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தைக்கு வழங்கிய உணவு தொண்டையில் சிக்கியதில் ஒரு வயது மதிக்கத்தக்க குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

26 வயதுடைய தாய் உணவை தயாரித்து தனது கைக்குழந்தைக்கு கொடுக்கும் போதே வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர், வீட்டினுள் பெண் விழுந்து கிடப்பதைக் அயலவர்கள் அவதானித்துள்ள நிலையில், குழந்தையும் தனது தாயைக் கட்டிப்பிடித்தவாறு இருந்துள்ளது.

பின்னா் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது.

உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையின் தொண்டையில் உணவு சிக்கியதால் இந்த பரிதாப மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸாா் சந்தேகிக்கின்றனர்.

சிறுமியின் தாயான 26 வயதுடைய பெண் சில காலமாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனா்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments