Wednesday, January 15, 2025
HomeCinemaமகாலட்சுமியுடன் விவாகரத்தா விளக்கி கூறிய ரவீந்தர்..

மகாலட்சுமியுடன் விவாகரத்தா விளக்கி கூறிய ரவீந்தர்..

போன வருஷம் எவ்ளோ பெரிய விஷயம் நடந்திருந்தாலும் இப்பவும் மனசுல நிக்கும் ஒரே விஷயம் ரவீந்தர், மகாலட்சுமி திருமணம் தான். எப்படி இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டார்கள் என்று ஒரு பட்டிமன்றமே நடத்தினார்கள். பணத்திற்காக தான் மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாகவும், நீண்ட நாட்கள் இது நீடிக்காது எனவும் பலர் கழுவி ஊற்றினர்.

எதற்கும் அசராத ரவீந்தர் மகாலட்சுமியுடன் எடுக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாவில் போட்டு 90ஸ் கிட்ஸை கடுப்பேற்றி வந்தார். இதுக்கு இல்லையா ஒரு எண்டு என புலம்பி கொண்டிருந்த நிலையில், ரவீந்தர் மகாலட்சுமி விவாகரத்து ஒரு செய்தி காற்றுப்போக்கில் வந்து போனது.

அதை கொஞ்சம் காது கொடுத்து தான் கேட்போம் என்று பார்த்தால் இருவரும் எங்களுக்கு விவாகரத்தா என அவர்களே ஷாக் ரியாக்ஷன் கொடுக்கின்றனர். அதிலும் ரவீந்தர் கொடுக்கும் அலப்பறை தான் தாங்க முடியவில்லை. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரவீந்தரிடம் விவாகரத்துச் செய்தி பற்றி கேட்டுள்ளனர்.

எங்களுக்குள் பெரிதாக சண்டைகள் எதுவும் வருவதில்லை, மகாலட்சுமி என் மீது கூடுதல் அன்பு வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி மகாலட்சுமியின் தோழிகளிடம் நான் பேசும்போது தான் எங்களுக்குள் சண்டை வரும் என்று கூறி இருக்கிறார். இதை கேட்ட ரசிகர்கள் காண்டாகி விட்டார்கள்.

90ஸ் கிட்ஸ் பாதி பேரு இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் நிலையில், இரண்டாவது முறையா லட்டு மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் செய்து கொண்டு இவருக்கு நக்கல பாத்தியா என வயித்தெரிச்சல் படுகிறார்கள். அதுமட்டும்இன்றி எங்கள் சாபம் சும்மா விடாது என கமேண்ட்டும் செய்துள்ளனர்.

ரவீந்தர் பல பேரின் வாழ்க்கையில் குடைச்சல் கொடுத்து பிரித்து வைத்துள்ளார், ஏன் வத்திக்குச்சி வனிதா கூட இந்த லிஸ்டில் இருக்கிறார். அதேபோல் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் வாழ்க்கை குட்டிச் சுவரானதற்கும் மகாலட்சுமி தான் காரணம் என அவரது மனைவி யூடியூபில் கிளித்து எடுத்தார். ஆகையால் ஜாடிக்கேத்த மூடி போல் ரவீந்தருக்கு ஏத்த பொண்டாட்டி மகாலட்சுமி தான்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments