Wednesday, January 15, 2025
HomeSrilankaSportsஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஓவல் மைதானம் ஒரு பார்வை..

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஓவல் மைதானம் ஒரு பார்வை..

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை தொடங்க உள்ளது. இதில் இந்தியா -ஆஸ்திரேலிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த மைதானம் குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம். ஓவல் மைதானத்தில் 1880 முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் சர்வதேச கிரிக்கெட போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. ஓவல் மைதானத்தில் இதுவரை 104 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இங்கிலாந்து அணி 43 போட்டிகளிலும், வெளிநாட்டு அணிகள் 23 போட்டிகளிலும் வென்றுள்ளன. இந்த மைதானத்தில் டாஸ் வென்ற அணிக்கான வெற்றி வாய்ப்பு 34.62 சதவீதம் (36 போட்டிகள்). அதே போல முதலில் பேட் செய்யும் அணிக்கான வெற்றி வாய்ப்பு 35.58 சதவீதம் (37 போட்டிகள்). இரண்டாவதாக பேட் செய்யும் அணிக்கான வெற்றி வாய்ப்பு 27.88 சதவீதம் என உள்ளது.

டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்கள் (ஜூன் 7, 8 மற்றும் 9) ஆகிய தேதிகளில் ஓவலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நான்கு மற்றும் ஐந்தாவது நாள் மதியம் மற்றும் மாலை நேரத்தில் மழை பொழிவு இருக்கலாம் எனவும் தெரிகிறது. மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டால் ஆறாவது நாள் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு காரணம் இங்கிலாந்தில் வானிலை முறையாக கணிக்க முடியாத சூழல் இருப்பதே காரணம் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் இந்த மைதானத்தில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியம். அதே போல ஆடுகளம் கடைசி 2 நாட்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது களத்தில் பந்து பவுன்ஸ் அதிகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இருக்கும் பவுன்ஸ் சூழல் ஓவலில் இருக்க வாய்ப்புகள் உள்ளது. இதை இந்திய அணி வீரர்கள் ஓவலில் தங்களது முதல் வலை பயிற்சி மேற்கொண்ட போதே எதிர்கொண்டனர்.

இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலிய அணி மிகவும் மோசமாக சாதனை வைத்துள்ள ஒரே மைதானமாக ஓவல் உள்ளது. 38 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஓவல் மைதானத்தில் 44 ரன்களுக்கு (இங்கிலாந்து அணிக்கு எதிராக 1896) ஆஸ்திரேலியா ஆல் அவுட்டாகி உள்ளது. இந்திய அணி 1936 முதல் ஓவல் மைதானத்தில் விளையாடி வருகிறது.

இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 2 வெற்றி, 5 தோல்வி மற்றும் 7 போட்டிகள் சமனில் முடித்துள்ளது. கடந்த 2021-ல் இங்கிலாந்து அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இதே மைதானத்தில் வென்று அசத்தி உள்ளது. கடந்த 2017 முதல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments