Wednesday, January 15, 2025
HomeSrilankaஇளம் தம்பதியினர் வீட்டில் வைத்து கொடூரமாக வெட்டிப் படுகொலை!

இளம் தம்பதியினர் வீட்டில் வைத்து கொடூரமாக வெட்டிப் படுகொலை!

இளம் தம்பதியினர் வெட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வசித்த வீட்டின் அறையொன்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குருநாகல் – நாரம்மலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

29 வயதுடைய வசந்த, 27 வயதுடைய ரோஹிணி ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் – மல்லவபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி நாரம்மலை பிரதேசத்திலுள்ள வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளனர்.

நேற்றுப் பிற்பகல் அந்த வீட்டிலிருந்து அவர்கள் கழுத்திலும் உடலிலும் பாரிய வெட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டின் அறை இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது.

இருவரும் வன்முறைக் குழுவொன்றால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதிவானின் உத்தரவுக்கமைய சடலங்களை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், கொலையாளிகளைத் தேடும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments