Thursday, September 21, 2023
HomeSrilankaவவுனியா பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் ஆரம்பம்!

வவுனியா பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் ஆரம்பம்!

வவுனியா பல்கலைக்கழத்தில் வெளிவாரி ஊடக கற்கைகள் பிரிவு இன்று (28) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா பூங்கா வீதியில் உள்ள பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பிரிவில் கல்வியியலாளர் திருமதி மதிவதனி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் த. மங்களேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினராக ஊடகவியலாளர் ந. கபிலநாத் கலந்துகொண்டிருந்தார்.

இதேவேளை வெளிவாரி கற்கைகள் பீட பணிப்பாளர் மற்றும் தொழில் மேம்பட்டு பிரிவு அதிகாரியும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந் நிலையில் ஆர்வமுள்ள வெளிவாரி ஊடக கற்கை நெறிக்காக புதிய மாணவர்களை எதிர்வரும் சனிக்கிழமைக்கு முன்னர் வவுனியா பல்கலைக்கழகத்துடன் தொடர்புகொண்டு பதிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தையும் பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments