Saturday, February 15, 2025
HomeSrilankaமட்டக்களப்பு பொலிஸாரின் 0பாடசாலை மாணவர்களுக்கு அறிவித்தல்

மட்டக்களப்பு பொலிஸாரின் 0பாடசாலை மாணவர்களுக்கு அறிவித்தல்

பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல் எனும் தலைப்பில் மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரால் துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். நாட்டில் அண்மை காலமாக சிறுவர் கடத்தல் அதிகரித்துள்ளது.

எனவே, பாடசாலை மாணவர்களை அவதானமாக செயற்படுமாறு அந்த துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (22) பொலிஸாரினால் விநியோகிக்கப்பட்டுள்ளது.  பாடசாலை முடிந்தவுடன் மாணவர்கள் அநாவசியமாக வெளியில் நிற்காமல் வீட்டுக்கு உடனடியாக செல்ல பணிப்புரை வழங்கல், இனம் தெரியாதோர் உண்பதற்கு ஏதாவது கொடுத்தால் வாங்க வேண்டாம் எனவும்.

இனம் தெரியாதோர் வாகனங்களில் ஏற்றிச் சென்று வீடுகளுக்கு விடுகின்றோம் என்றால் வாகனங்களில் ஏற வேண்டாம் எனவும் மாணவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் இது தொடர்பாக பெற்றோருக்கு தெரியப்படுத்துமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினால் பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்புக்கு அல்லது 065- 2224356, 065 2224422 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்,  பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments