Thursday, September 21, 2023
HomeSrilankaPoliticsவட மாகாண ஆளுநராக இன்று கடமைகளை பொறுப்பேற்றார்

வட மாகாண ஆளுநராக இன்று கடமைகளை பொறுப்பேற்றார்

புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வு இன்று (22) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் ஆளுநர் சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மே 15 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மே 17 ஆம் திகதி பி.எஸ்.எம்.சாள்ஸ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இரண்டாவது தடவையாகவும் வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments