பணப்பற்றாக்குறையில் உள்ள இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் 525 மில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்திர இழப்பை சந்தித்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
ஏறக்குறைய 6,000 ஊழியர்களைக் கொண்ட ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் வரலாற்றில் மிக மோசமான நிதி நெருக்கடி இதுவாகும்.
வங்குரோத்து அடைந்துள்ள தெற்காசிய தீவின் (இலங்கை) சர்வதேச நாணய நிதியத்தின் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்பிற்கு மறுசீரமைப்பு தேவைப்படுகின்றது.
இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கும் 51 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் யோசனையில் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸும் அடங்கும்.
2022 மார்ச் வரைக்குமான 12 மாதங்களில் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனம் 525 மில்லயன் அமெரிக்க டொலர் இழப்பை சந்தித்துள்ளது.
இது கொவிட்-19 தாக்கத்தினால் ஏற்பட்ட நட்டத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.