Wednesday, September 27, 2023
HomeSrilankaPoliticsநாணய நிதியம் அரசியல் மனித உரிமை நிபந்தனைகளை விதிக்க முடியாது

நாணய நிதியம் அரசியல் மனித உரிமை நிபந்தனைகளை விதிக்க முடியாது

இலங்கையில் சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கினால் ஆபத்துக்கள் ஏற்படலாம் என்பதை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது என அந்த நாட்டின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் வெளியுறவு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் அன்ரூ மிட்செல் பொதுச்சபையில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார்.

எனது நண்பர் குறிப்பிட்ட கொவிட் பெருந்தொற்றின் தாக்கம் உக்ரைன் மீதான ரஸ்ய படையெடுப்பின் தாக்கம் ஆகிய அனைத்தும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளன என அன்று மிட்ச்செல் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக நிதியை தவறான முகாமை செய்தமை உட்பட கட்டமைப்பு பலவீனங்களால் மேற்சொன்னவற்றின் தாக்கங்கள் அதிகரித்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் இலங்கை தனது கடன்களை செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலையை அடைந்தது கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டது,பணவீக்கம் 73 வீதத்தினால் அதிகரித்தது சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் போசாக்கான மலிவான உணவை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்,எரிபொருள் மருந்து அத்தியாவசியப்பொருட்களிற்கு பற்றாக்குறை காணப்பட்டது எனவும் பிரிட்டனின் அமைச்சர் அன்ரூமிட்ச்செல் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் சமீபத்தைய அறிக்கையின் படி அந்தவேளையில் ஒரு பன்முகபேரழிவை எதிர்கொண்டிருந்தது,பின்னர் நிலைமை மேம்பட்டாலும் இன்னமும் பலர் வாழ்க்கைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மேலும் பல இலங்கையர்கள் வாழ்க்கை தரம் மோசமான சரிவை சந்தித்துள்ளது எனவும் அன்ரூமிட்ச்செல் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைமை மோசமடைவதை உணர்ந்த பிரிட்டன் மோசமாக பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவுவதற்காக 3 பில்லியன் டொலர்களை வழங்கியது குறைந்த வருமானம் உழைக்கும் நாட்டிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது வழமைக்கு மாறான விடயம் என்ற போதிலும் இந்த உதவி இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின் பாரதூர தன்மையையும் அவசர நிலையையும் வெளிப்படுத்தியதுடன் இரண்டு நாடுகளிற்கும் இடையிலான நெருக்கமான உறவுகளையும் வெளிப்படுத்தியுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடிக்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காண்பதற்கும் கடன்பேண்தகுதண்மை பொருளாதார மீட்சி ஆகியவற்றினை உறுதி செய்வதற்கும் சர்வதேச சமூகங்களுடன் இணைந்து பிரிட்டன் செயற்படுகின்றது நாங்கள் சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கையின் பொருளாதார கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களிற்கு ஆதரவளிக்கும் நான்கு வருடங்களிற்கான 3000 மில்லியன் ஆதரவை நாங்கள் வரவேற்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம்,இந்த பேச்சுவார்த்தைகளில் ஆக்கபூர்வமாக கலந்துகொள்ளுமாறு அனைத்து கடன்வழங்குநர்களையும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் எனவும் அன்ரூமிட்ச்செல் தெரிவித்துள்ளார்.

எனது நணபர் சீனா குறித்து கேள்விஎழுப்பினார் நான் இந்த கேள்விக்கு தெளிவாக பதில் அளிக்க விரும்புகின்றேன், மூன்றாம் உலகின் எந்த நாட்டிற்கும் உதவி வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற விடயங்களில் சீனா ஒரு முக்கியமான நாடு – புதிய பட்டுப்பாதை திட்டம் உட்பட சீனாவின் முதலீடுகள் ஏனைய உட்கட்டமைப்பு முதலீடுகளுடன் சர்வதேச உட்கட்டமைப்பு இடைவெளியை நிரப்புவதற்கு உதவக்கூடும், என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் அமைச்சர் ஆனால் கடன்பேண்தகுதன்மை சீனாவின் அரசியல் பொருளாதார செல்வாக்கு குறித்த விடயங்கள் குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கான இலங்கையின் கடனின் தன்மை சிக்கலானது மற்றும் மாறுபட்டது,மேலும் கடன்விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கு கடந்த காலங்களில் சீனா உதவ தயங்கியமை கரிசனை அளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

நான் தற்போது மனித உரிமை குறித்த முக்கிய கேள்வி குறித்து எனது கவனத்தை செலுத்துகின்றேன்,பிரிட்டனின் பொதுச்சபையின் சில உறுப்பினர்கள் சர்வதேச நாணயநிதியம் தனது நிதி உதவி தொடர்பில் நிபந்தனைகைள விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்,ஆனால் சர்வதேச நாணயநிதியம் அரசியல் பொருளாதார விடயங்கள் தொடர்பில் நிபந்தனைகளை விதிக்க முடியாத நிலையில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூகபாதுகாப்பு வலைப்பாதுகாப்புகள் அனைத்து சமூகங்களிற்குமான போதுமான ஆதரவை வழங்குவதை உறுதிசெய்வதற்காக இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை நாங்கள் நெருக்கமாக அவதானிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் உட்பட இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கும் மனித உரிமைகளை உறுதி செய்வதற்கான சர்வதேச சமூகம் தலைமையிலான முயற்சிகளில் பிரிட்டன் ஈடுபட்டுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் இந்த முயற்சிகள் வெற்றியளிப்பதற்காக பாதிக்கப்பட்டவர்கள் உட்பட தொடர்புபட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் அரசாங்கம் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments