Wednesday, January 15, 2025
HomeSrilankaபிரித்தானிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் -யாழ்ப்பாண தமிழர் பெரு வெற்றி

பிரித்தானிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் -யாழ்ப்பாண தமிழர் பெரு வெற்றி

பிரித்தானியாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

பிரித்தானிய உள்ளூராட்சி சபைத் தேர்தலில், இம்முறை, ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சி குறிப்பிடத்தக்க அளவில் தோல்விகளை சந்தித்துள்ளது. எனினும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ்.

பூர்விகம் யாழ்ப்பாணம்

இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய்கணேஷ், லண்டன் மெட்ரோபொலிட்டன் பல்கலையில் சர்வதேச சுற்றுலா தொடர்பில் பட்டப்படிப்பு முடித்தவர் ஆவார்.

தனது வெற்றி குறித்து பேசிய ஜெய்கணேஷ், Sherborne St John மற்றும் Rooksdown பகுதியில் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

தெரிவானதில் பெருமிதம்

தான் வாழும் தொகுதியிலேயே தான் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமிதமாக கருதுவதாக தெரிவிக்கும் ஜெய்கணேஷ், தனக்கு வாக்களித்த மக்களின் நலனுக்காக அக்கறையுடன் செயல்பட இருப்பதாகவும், Basingstoke மற்றும் Deane நகர சபையின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைக்க இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments