காணாமல் போயுள்ள 20 லட்சம் வாகனங்கள்

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 8,355,011 வாகனங்களில் 20 இலட்சம் வாகனங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
1970ல் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டதாக கூறப்படும் வாகனங்கள் மற்றும் பல்வேறு விபத்துகளில் அழிக்கப்பட்ட வாகனங்களும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் போக்குவரத்துத் துறையின் காற்று மாசு பிரிவின் விதிமுறைப்படி, வாகனங்களின் புகைப் பரிசோதனை செய்யப்பட்டு, வாகனங்களின் வருவாய் உரிமம் பெற புகைச் சான்றிதழ் கட்டாயம்.
ஆனால் ஆண்டுக்கு 55 லட்சம் வாகனங்கள் மட்டுமே புகை ஆய்வுக்கு பரிந்துரைக்கப்படுவதாக அதன் இயக்குநர் பொறியாளர் ஐ. ஜி. தசுன் ஜானகவை மேற்கோள்காட்டி அருண செய்தி வெளியிட்டுள்ளது.